பொய்தேசம்

 இருண்ட தேசமிது

பகலில் தொலைத்துவிட்டு 

இரவில் தேடும் 

முகமூடி மனிதர்கள் 

தாயோ

பிள்ளையின் வார்த்தையறியா

கிள்ளை

தந்தையோ

துணையின் காதல் ஓவியம் காணா

வெற்றேடு

சகோதரனோ

சுக சொத்தில் புதைந்த

சேற்றுமடு

தேகபுத்திரியோ

கற்பின் விலைதேடும்

அழுகிய பிறை

பாலுக்கு அழும் பிள்ளையாய்

தாகத்தோடு காத்திருக்கும் பூமி

சூரியனை புதைத்துவிட்டு 

விடியல் தேடும் விதை

யாருக்கும்  சொல்லாமல் 

விதவையானது வானம்


Comments