Posts
Showing posts from March, 2022
Yettukalvi
- Get link
- X
- Other Apps
ஏட்டுக் கல்வி சிறகுகளை விரிக்குமுன்னே பொதி சுமக்கக் கற்றுக்கொடுத்தது புத்தகப்பை சுமந்தே பூப்பெய்திய புன்னகை மலர்கள் கற்கும் பாடங்கள் எதுவும் வாழ்க்கையோடு வாழவிரும்புவதில்லை தாவணிக்குத் தாவும் முன்னே தாலிக்கு தாரை வார்த்தாள் பிள்ளை மனம் மாறுமுன்னே தாலாட்டும் தாயானாள் எட்டாக் கனிகள் கிட்டியது கைக்கு எட்டிக் காயாய் அறிவுக்கான தேடலில் உணர்வுகள் உட்புகுந்து கொள்கிறது பாலில் விஷமும் பரிணமித்து விடுகிறது தோன்றும் முன்னே தேயும் நிலாக்கள் சுயத்தைச் சுடும் சூரியன்கள்💦 போர்வைக்குள் புதைய மறுக்கும் பிறைகள் சமூகத்தை வெளுக்கவே விடாத கறைகள் எழுதப்படாத லிபியாய் வாழ்க்கைப் புத்தகம்
Nagareegam
- Get link
- X
- Other Apps
......................... நாகரிகம்................................ புதுமையின் நாற்று நாகரிகக் கீற்று உலகப் பெண்மையை உறிஞ்சிக் கொண்டாள் உலோகப் பறவைகளின் உரசலும் கான்கிரீட் மரமாய் வீடுகளும் அன்பையும் அடகு வைக்கும் அவசர வாழ்க்கையும் அவளை ஆட்கொண்டது நட்பு வட்டம் விசாலமானதில் தொலைந்துவிட்ட கற்பை மீட்க முடியவில்லை கலைத்து விட கதறுகிறாள் விடிந்தால் பொதுத்தேர்வு முடிவு தெரிந்ததும் முயற்சித்து மூர்ச்சித்தாள் விடுதி நாற்றங்கால் வயிற்றை மட்டுமல்ல வாழ்க்கையையும் விளைவித்தது கனவுகளை உடைந்த கோப்பைக்குள்ளும் ஆசைகளை சரிந்த சேலைக்குள்ளும் புதைத்துவிட்டு புன்னகையின் புழுதியானாள் ஓவ்வொரு இரவும் அமாவாசையின் அசலானது ஏழைகளைப் பார்த்தே ஏளனம் செய்யும் நிலவின் வருகைக்குமுன் நித்திரை கொள் புன்னகையின் பொருள் புரிந்தது….