Nagareegam
.........................நாகரிகம்................................
புதுமையின் நாற்று
நாகரிகக் கீற்று
உலகப் பெண்மையை
உறிஞ்சிக் கொண்டாள்
உலோகப் பறவைகளின்
உரசலும்
கான்கிரீட் மரமாய் வீடுகளும்
அன்பையும் அடகு வைக்கும்
அவசர வாழ்க்கையும்
அவளை ஆட்கொண்டது
நட்பு வட்டம் விசாலமானதில்
தொலைந்துவிட்ட கற்பை
மீட்க முடியவில்லை
கலைத்து விட
கதறுகிறாள்
விடிந்தால் பொதுத்தேர்வு
முடிவு தெரிந்ததும்
முயற்சித்து
மூர்ச்சித்தாள்
விடுதி நாற்றங்கால்
வயிற்றை மட்டுமல்ல
வாழ்க்கையையும் விளைவித்தது
கனவுகளை
உடைந்த கோப்பைக்குள்ளும்
ஆசைகளை
சரிந்த சேலைக்குள்ளும்
புதைத்துவிட்டு
புன்னகையின் புழுதியானாள்
ஓவ்வொரு இரவும்
அமாவாசையின் அசலானது
ஏழைகளைப் பார்த்தே
ஏளனம் செய்யும்
நிலவின் வருகைக்குமுன்
நித்திரை கொள்
புன்னகையின் பொருள் புரிந்தது….
இன்னும் பல படைப்புகளை எதிர்பார்க்கிறோம் நண்பரே.... வாழ்த்துக்கள்
ReplyDelete