Yettukalvi
ஏட்டுக் கல்வி
சிறகுகளை விரிக்குமுன்னே
பொதி சுமக்கக்
கற்றுக்கொடுத்தது
புத்தகப்பை சுமந்தே
பூப்பெய்திய புன்னகை மலர்கள்
கற்கும் பாடங்கள் எதுவும்
வாழ்க்கையோடு
வாழவிரும்புவதில்லை
தாவணிக்குத் தாவும் முன்னே
தாலிக்கு தாரை வார்த்தாள்
பிள்ளை மனம் மாறுமுன்னே
தாலாட்டும் தாயானாள்
எட்டாக் கனிகள்
கிட்டியது கைக்கு
எட்டிக் காயாய்
அறிவுக்கான தேடலில்
உணர்வுகள் உட்புகுந்து கொள்கிறது
பாலில் விஷமும்
பரிணமித்து விடுகிறது
தோன்றும் முன்னே
தேயும் நிலாக்கள்
சுயத்தைச் சுடும்
சூரியன்கள்💦
போர்வைக்குள்
புதைய மறுக்கும் பிறைகள்
சமூகத்தை
வெளுக்கவே விடாத கறைகள்
எழுதப்படாத லிபியாய்
வாழ்க்கைப் புத்தகம்
Comments
Post a Comment