புதுப்பாதை
இறுக்கிப் பிடித்தாலும்
விலகும் முந்தானை தான்
பாசமும் பணமும்
வெற்றிலை எச்சிலாய்
வீதியெங்கும் சிதறிக் கிடக்கும்
அரிவாள் துண்டுகள்
காதல் வாரிசுகள்
விவாகரத்து வாசலில்
விழித்துக் கிடக்கின்றன
இன்றைய பசுக்களுக்கும்
மனிதனைப் பின்பற்ற ஆசை
மாமிசக்கடை தேடுகின்றன
பள்ளிகள்
பள்ளியறை ஆனபின்
பாடங்கள் பறவைகளாயின
மொத்தத்தில்
மாறிக்கொண்டே வருகிறது
புதுமைப் போர்வைக்குள்
மனித பாதை....
Comments
Post a Comment