கிழக்கு வானம்


பூ பறிக்க கை வைத்தேன்
முந்திக்கொண்டது முட்கள்
உதிரத்தின் துளிகளில்
உன் பிம்பம் சிரிக்கிறது
நான் வேர்களில் நீருற்றுகிறேன்
நீயோ அமில மழையில்
நனைந்து கொண்டிருக்கிறாய்
நிஜம் வேறு நிழல் வேறு
நீ அறிவாயா?
வெளிச்சம் போனால்
நிழலும் நீங்கி விடும்
உன் விழி  மீட்டும் வீணையின்
விரல்கள் நான்...
வெள்ளை உள்ளம் புதைந்த
புது வனம் நானானேன்
ரீங்காரமின்றி நிசப்தம் நிலவுது
வேர்விட்ட ஆலமரம்
கிளைகளை துண்டிக்க துடிப்பதேனோ
கிளியே நீ கூறு
இங்கே விழுதின் பழுதென்ன
விடியல் தேடும் விளக்கானேன்
விடியுமா? இல்லை
உன் விழியில் மடியுமா?
உன் வரவை நோக்கும் வானம்...

முனைவர் இரா.திருப்பதி
உதவிப் பேராசிரியர் தமிழ்த்துறை
அரசு கலைக் கல்லூரி சேலம் 7 

Comments

Popular posts from this blog

பொய்தேசம்