நிழல்நிலா
நிறைந்த குளம்
நீந்தத் தெரியாத மீன்கள்
கோடையிலும் உலரவில்லை
பூவாய் புன்னகைக்கும் செடிகள்
பசும் புல்வெளி
நடக்க கற்றுக் கொள்ளாத பாதசாரிகள்
வியர்வையில் சிரிக்கும்
மின்னல் நாற்றுகள்
என்
தேசமெங்கும் தேன்கூடு
கசக்கும் வாழ்க்கை
ஆனாலும்
வாழ்க்கை மீதமிருக்கிறது
தரையிலும் தப்பிக்கும் மீன்
அவள் வரைந்த கோலம்
மேகக் கட்டிலில்
அரைகுறை நிலா
எழுத தவிர்த்து விடுகிறது
இதய தூரிகை
புனிதர்களின் மனசு மட்டுமல்ல
கூந்தலுக்கும் தொற்றிக் கொண்டது
வெண்மை
ஆனாலும் காதல் வண்ணத்தில்
அழகானது பூமுகம்
மலர்ந்த பூக்களோ
அவள் உதிர்க்கும்
வார்த்தை முத்துக்கள்
வாழ்க்கை மிச்சமிருக்கிறது
அவள் நிழலில்
அந்திமப்பயணியாய்...
Comments
Post a Comment